என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அங்கன்வாடி மையம்"
- அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ. மாணிக்கம் திறந்து வைத்தார்.
- எம்எல்ஏ மற்றும் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்தில் புதியதாக திறந்து வைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்களை கண்டால் இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை என்று ஆதங்கப்பட வைக்கிறது.
ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ. மாணிக்கம் திறந்து வைத்தார். அங்கன்வாடி மைய கட்டித்திற்குள் குழந்தைகள் கற்பிப்பதற்காக வரையப்படு இருந்த தேசிய கொடி, தேசிய தலைவர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பெயர்கள் பிழைகளுடன் எழுதப்பட்டு இருந்தன.
கொய்யா பழத்துக்கு கோய்யா பலம், வெண்டைக்காய்க்கு வெட்டககாய், வாழை பழத்துக்கு வாழைபலம், தர்பூசனிக்கு தர்புசணி என்று எழுதப்பட்டு இருந்தது. ஆங்கில மாதங்களும் தவறாக எழுதப்பட்டு இருந்தது.
இதனை கண்ட எம்எல்ஏ மற்றும் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கல்வி கற்க வரும் குழந்தைகளுக்கு இப்படியா தவறாக எழுதுவது என்று பெற்றோர் ஆதங்கப்பட்டனர். இதையடுத்து அவற்றை திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நாள்தோறும் இரவு நேரங்களில் வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கரடி சேதப்படுத்திய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கரடிகள் உணவைத் தேடி வனப்பகுதியில் இருந்து குடியிருப்புகளுக்கு வருவது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள முத்தநாடு எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த கரடிகள் ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தன. பின்னர் அங்கிருந்த உணவுப்பொருட்களை தின்று சூறையாடி விட்டுச் சென்றனர். நாள்தோறும் இரவு நேரங்களில் வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கரடியை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கரடி சேதப்படுத்திய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
கதவுகளில் பாதுகாப்பை ஏற்படுத்த இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், கரடிகளுக்கு பிடித்த உணவுகளான எண்ணெய் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பான அறைகளில் வைக்கவும் கிராம மக்களுக்கு உத்தரவிட்டனர். மீண்டும் கரடி வந்தால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- சோளிங்கர் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
- பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட உளியநல்லூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகமும், ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா சதாசிவம் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள், ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்தினம் கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி,பிரபாகரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பொன்னுரங்கம், ஒன்றிய கவுன்சிலர் கவுரி வேலாயுதம், மாவட்ட பிரதிநிதி சம்பத், கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன், மணி, ஜெயக்குமார், காங்கிரஸ் நெமிலி ஒன்றிய தலைவர் நந்தகுமார், துணைத்தலைவர் கீழ்வீதி பாலாஜி, வேலு உட்பட கலந்து கொண்டனர்.
- விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
- அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு ஒற்றையால் விளை பகுதியில் விஜய் வசந்த் எம்.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது.
பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், கவுன்சிலர் சுஜா அன்பழகன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த், அடிக்கலை நாட்டி வைத்து புதிய அங்கன்வாடி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு காங்கிரஸ் கமிட்டி செயலா ளர் வக்கீல் சீனிவாசன், அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சாம் சுரேஷ்குமார், , அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், பேரூ ராட்சி சுகாதார அதிகாரி முருகன், கவுன்சிலர்கள் ஆனிரோஸ் தாமஸ், அட்லின் சேகர், ஒற்றையால்விளை இந்து நாடார் சமுதாய வகை முத்தாரம்மன் கோவில் டிரஸ்ட் தலைவர் பாலசுந்தரம், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ், கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ஆதி லிங்கபெருமாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
- மேம்பாட்டு நிதியில் ரூ.11.80 லட்சம் ஒதுக்கீடு செய்தார்
இரணியல் :
திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு தலக்குளம் புதுவிளையில் உள்ள அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.11.80 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து தரைத் தளம், மேல் தளம் என அங்கன்வாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்தது.
பணிகள் முடிவடைந்த நிலையில் புதிய அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரீத்தம்மாள், 13-வது வார்டு கவுன்சிலர் பீட்டர்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஐய்வசந்த் எம்.பி புதிய கட்டிடத்தை ரிபன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி உதயம், குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.10.90 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.
- பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ஊராட்சி தலைவர் மரகதமணி மணியன் தொடங்கிவைத்தார்.
அவினாசி:
அவினாசி ஊராட்சி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சி காந்தி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் ரூ.10.90 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது. புதிய கட்டிடத்தை ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன் முன்னிலையில் ஊராட்சி தலைவர் மரகதமணி மணியன் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
இதையடுத்து பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ஊராட்சி தலைவர் மரகதமணி மணியன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பி.பாலாமணி, ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- புதியதாக அங்கன்வாடி மையத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
- கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கடலூர் பச்சையாங்குப்பம் ஊராட்சி சொத்திக்குப்பம், காரைக்காடு, அன்னவல்லி, சாத்தங்குப்பம் ஆகிய பகுதிகளில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை, குடிகாடு, புதுக்குப்பம், ஆண்டிக்குப்பம் பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை, பெரியகாரைக்காடு கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி நிதியின் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அங்கன்வாடி மையத்தை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
புதுக்குப்பம் பகுதியில் கடலூர்- ராமாபுரம் ( வழி கண்ணாரப்பேட்டை, வழி சோதனைப்பாளையம்) வரை இயங்கி வந்த அரசு பஸ் சேவையை, புதுக்குப்பம் வரை நீட்டிக்கப்பட்ட வழித்தடத்திலான பஸ் சேவையை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார் . பின்னர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் 14 மகளிர் சுய உதவிக் குழுக்களில் மொத்தம் 176 நபர்களுக்கு ரூ.91 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பீட்டில் கடன் உதவிக்கான காசோலை களை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். இதில் கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், , கூட்டுறவு இணை பதிவாளர் நந்தகுமார், ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் காசிராஜன், சுப்பிரமணியன், விஜயசுந்தரம், மாநகர தி.மு.க செயலாளர் ராஜா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தெற்கு கடையம் பஞ்சாயத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக அங்கன்வாடி கட்டிடம், ரேசன் கடை கட்டப்பட்டது.
- கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் அவை திறக்கப்படாத நிலையில் காட்சியளிக்கிறது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு கடையம் பஞ்சாயத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக அங்கன்வாடி கட்டிடம் மற்றும் ரேசன் கடை சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
இந்நிலையில் கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் அவை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாத நிலையில் காட்சியளிக்கிறது. இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், அதிகாரி களின் அலட்சியத்தால் கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல், மக்கள் பணம் வீணாகி கொண்டிருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சித் துறையும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அங்கன்வாடி மையங்களில் தேசிய குடற்புழு நீக்க விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.
- பள்ளி மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க (அல்பென்டசோல்) மாத்திரைகள் வழங்கப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் தேசிய குடற்புழு நீக்க விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.
பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க விழிப்புணர்வு தின நிகழ்ச்சியை ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ஜெமினி தொடங்கி வைத்தார்.
1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க (அல்பென்டசோல்) மாத்திரைகள் வழங்கப்பட்டது. 20 வயது முதல் 30 வயதுடை யோருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், மருத்துவ அலுவலர் அபிராமி மற்றும் நர்சுகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ஜெமினி பேசுகையில், குடற்புழுவால் ஏற்படும் உபாதைகள், ரத்த சோகை பாதிப்பு, பேறு கால சிக்கல்கள் மற்றும் கையாளும் வழிமுறைகள் குறித்தும், குடற்புழு நீக்கத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினார்.
இதில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், நர்சுகள், பொதுமக்கள் அனைவரும், சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் வட்டார புள்ளியியலாளர் அவினாசிலிங்கம் நன்றி கூறினார்.
- கட்டி முடித்து 5 ஆண்டுகளாகியும் அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வரவில்லை.
- அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.8.50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத அங்கன்வாடி மையத்தால் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமுதாயக்கூடத்தில் பயின்று வருவது பெற்றோர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கி யுள்ளது.
அங்கன்வாடி மையம் பயன்பாட்டிற்கு வராமலேயே கடந்த 2022-23-ம் ஆண்டில் அங்கன் வாடி மையம் பராமரிப்பு செய்தல் என்ற பெயரில் 1.75 லட்சம் மதிப்பில் மராமத்து பணியும் செய்துள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளா க்கியுள்ளது.
மேலும் பேவர் பிளாக் அமைத்தல் என்ற பெயரில் 4.55 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி முன்பு பேவர் பிளாக் அமைத்து சாலையும் அமைத்துள்ள ஊரக வளர்ச்சித் துறையினர் அங்கன்வாடி மையத்தை திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குழந்தைகள் தற்போது சமுதாய கூடத்தில் உள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளாக திறக்கப்ப டாமல் உள்ள நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் குழந்தை களை தங்கி படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அங்கன்வாடி மையத்தை திறக்க அதிகா ரிகளிடம் பொதுமக்கள் சார்பிலும் ஊராட்சி மன்றத்தின் சார்பிலும் தொடர்ந்து முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் குழந்தை களை சமுதாய கூடத்தில் தொடர்ந்து தங்க வைக்க முடியாத நிலை உள்ளது. ஆகையால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
- பச்சிளங்குழந்தைகள் மேடும் பள்ளமும் உள்ள தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம், பூகானஅள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட பொம்மரசம்பட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இக்கட்டிடத்தின் சுவர்கள் விரிசல்விட்டு எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
மேலும் வகுப்பறை முழுவதும் சுமார் அரை அடி அளவிற்கு பள்ளமாகி உள்ளது. இதனால் குழந்தைகள் நடக்க முடியாமல் கீழே தடுமாறி விழுந்து வருகின்றனர்.
பச்சிளங்குழந்தைகள் சமதளத்தில் அமர முடியாமல் மேடும் பள்ளமும் உள்ள தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
இதுகுறித்து சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை,
எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்டது
வாணியம்பாடி:
வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்மேம்பாட்டு நிதியில் இருந்து உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிட திறப்புவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சிதலைவர் பூசாராணி தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற உறுப் பினர் கீதாஜெகன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச் சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந் தில்குமார், குழைந்தைகள் வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) ஆர். செல்வி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்